2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நூல் வாசிப்பு - பயனும் பார்வையும்

Kogilavani   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கம், சமூக சிற்பிகள், நியூஸ்சி ஊடக நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நூல் வாசிப்பு - பயனும் பார்வையும்” நிகழ்வு, கொழும்பு தமிழ் சங்கத்தில், வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்றது.

கொழும்பு தமிழ சங்கத் தலைவர் சட்டத்தரணி கு.இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் முன்னிலை வகித்து, பேருரை ஆற்றியிருந்தார்.

இந்நிகழ்வின் சிறப்புரைகளை, மலேசியாவிலுள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல், இந்தியாவின் காரைக்குடி தமிழ்ப் பண்பாட்டு மய்யம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை, இந்தியாவின் சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் வே.தனுஜா, ஆந்திரா பிரதேசம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. விவேகானந்த கோபால் ஆகியோரும், சமூக சிற்பிகள் அமைப்பின் இயக்குநர் ஷெரின் சேவியர், நியூஸ்சி ஊடக நிறுவனத்தின் இயக்குநர் கௌரி அனந்தன் ஆகியோரும் ஆற்றியிருந்தனர்.

அன்றைய நிகழ்வில், தென்னிந்தியாவிலிருந்து வருகைதந்த 55 தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொண்டதோடு, அவர்கள் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் கொழும்பு தமிழ்ச் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்தனர். செம்புலம் ஆய்விதழும் அன்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X