Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 18 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி அம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 8ஆவது ஆண்டு குருபூஜை, ஆலயத்தின் தற்போதைய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் கடந்த 14ஆம் திகதி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான மண்டபத்தில் இடம்பெற்றது.
காலையில் ஆலயத்தில் விசேட பூஜையும் அன்னையின் நினைவாலயத்தில் வழிபாடு என்பன இடம்பெற்றதையடுத்து, திருமுறை மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடு துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் திருமுறைப் பாராயணம் என்பனவும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது. துர்க்கா தேவஸ்தானத்தின் உபதனாதிகாரி சு.ஏழுர் நாயகம் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஞானகுமாரி சிவனேசனின் பண்ணிசை அரங்கம் இடம்பெற்றது.
தலைமையுரையத் தொடர்ந்து விசேட நிகழ்வுகளாக மூத்த சிவாச்சாரியார்களைக் கௌரவித்தல், பன்னிரண்டாம் திருமுறையான திருத்தொண்டர் புராணம் இரண்டாம் பாகம் திருமுறை நூல் வெளியீடு இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலப் போதனாசிரியர் ச.விநாயகமூர்த்தி நூலின் வெளியிட்டுரையை ஆற்றியதுடன் நூலையும்; வெளியிட்டு வைத்தார். நூலின் முதற்பிரதியை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான உபதலைவர் தேசகீர்த்தி ச.ஆறுமுகநாதன் பெற்றுகொண்டார்.
மூத்த சிவாச்சாரியார்கள், பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் சகோதரியும், துர்க்காபுரம் மகளிர் இல்ல அதிபருமான திருமதி சிவமலர் அனந்தசயன், பேராசிரியை கலைவாணி இராமநாதன், துர்க்காபுரம் இல்ல மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .