2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

’சின்னக் கந்தக்கட்டிய காமன் விழா’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெய்யன்

பாண்டிச்சேரி பேராசிரியர் கோபி தயாரித்த “சின்னக் கந்தக்கட்டிய காமன்  விழா” ஆவணத் திரைப்பட வெளியீடும் கலந்துரையாடலும், நாளை (18), கண்டி தவலந்தன்னை, சின்னக் கந்தகட்டிய காமன் திடலில், மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

காமன் கூத்து கலைஞன் தே.நவநீதனின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் வரவேற்புரையை, பிரமிளா வழங்கவுள்ளதுடன், சிறப்புரையை, விக்னேஸ்வரா விஞ்ஞான பாடசாலையின் அதிபர் பொன். இராஜகோபால் நிகழ்த்தவுள்ளார்.

ஆவணப்படத்தை, பேராசிரியர் கோபி வெளியிட்டு வைக்கவுள்ளார். விருந்தினராக கண்டி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்லதுரை தியாகநாதன் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X