2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கொழும்பு தமிழ் சங்கத்தின் நிகழ்வுகள்

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ் சங்கம் 75ஆம் நிறைவாண்டில் நடத்தும் தமிழ் இசை அளிக்கைகளும் ஆய்வரங்கமும், தலைக்கோல் வழங்கும் நிகழ்வும், கொழும்பு தமிழ்சங்கத்தில், இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.   

இவ்விழாவின் முதல் நாள் நிகழ்வு, இன்று மாலை 5.30 மணிக்கு, நாதஸ்வரக் கலைஞர் இணுவை வி.உருத்திராபதி அரங்கில், கொழும்பு தமிழ் சங்கத் தலைவர்  தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது.   இரண்டாம் நாள் நிகழ்வு, நாளை (20) காலை 9.30 மணிக்கு, பரம் தில்லைராஜா அரங்கில், கொழும்பு தமிழ் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெறவுள்ளது.  

இந்நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 5 மணிக்கு, சங்கீதபூஷணம் திலகநாயகம் போல் அரங்கில், கொழும்பு தமிழ் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .