2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

“கால் பட்டு உடைந்தது வானம்” நூல் வெளியீட்டு விழா

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்தர் – இன் “கால் பட்டு உடைந்தது வானம்” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில், 31.03.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர் தமிழ்நாடு, அய்யப்பமாதவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், நூலின் முதற்பிரதியை​ கவிஞர்.சோலைக்கிளி வெளியிட, அதனை விசேட ​​அதிதியாக கலந்துகொள்ளும், தேசிய கலந்துரையாடல் அரசகரும மொழிகள் ​அமைச்சு - சகவாழ்வு அமைச்சர் ​மனோகணேசன் பெற்றுகொள்ளவுள்ளார். அத்துடன் மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஜெ. ரகுபரன் நூல் குறித்து சிறப்புரையாற்றவுள்ளார்.

அதனை தொடர்ந்து திக்குவலை கமால், நளினி ரட்ணராஜா மற்றும் ஜெ.ரகுபரன் ஆகியோர் பிரதிகளை வௌயிட தி.ஞானசேகரன் (ஞானம் ​ஆசிரியர்), மூத்த எழுத்தாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் மற்றும் அமைச்சு ஆலோசகர் முனைவர் சிவலிங்கம் சதிஸ்குமார் முறையே பெற்றுகொள்ளவுள்ளனர்.

மேலும் இந்நூல் குறித்த கருத்துரையை ஞானராசா, தம்பு சிவசுப்ரமணியம், திக்குவலை கமால், யூசுப் எம்.அஷ்ரப் மற்றும் நளினி ரட்ணராஜா ஆகியோர் வழங்க கவிஞர் அய்யப்பமாதேவன் தலைமையுரையையும் ஏற்புரை எஸ்தரினாலும் வழங்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .