2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கவிதாயினி சுஜி பொற்செல்வியின் கவிதை நூல்கள் இரண்டு வெளியீட்டு விழா

Editorial   / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஏப்ரல் 23  சர்வதேச, புத்தக தினத்தினை சிறப்பிக்கும் வண்ணம், பேத்தாழை பொது நூலகத்தின் 'விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், வாழைச்சேனையைச் சேர்ந்த  கவிதாயினி சுஜி பொற்செல்வி எழுதி, தமிழ் நாட்டிலுள்ள 'இமைக்கா விழிகள் பதிப்பகத்தினால் பதிப்பிக்கப்பட்டுள்ள  'அகமடல்', 'பிரிவுழி' எனும் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

  நூலகத்தின் பொறுப்பாளர் ம.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற விழாவில், பிரதம அதிதியாகக் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன், சிறப்பு அதிதிகளாகத் தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளையினுடைய நிறுவனர் எழுத்தாளர் சௌ.நாகநாதன், அவ்வமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் ப.மதிபாலசிங்கம், கல்குடா கல்வி வலயத்தின் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்) த.தர்மபாலன், சுகாதாரத் திணைக்கள ஓய்வுநிலை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜே.எச்.இரத்தினராஜா மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் நிதி உதவியாளர் சி.ஜெயரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .