Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 22 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவசெல்வம் அருள்நேசனின் "கல்வியியல் கருத்துக்கோவை" என்ற நூல், இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார புதிய ஆய்வரங்கு மண்டபத்தில், எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்.த.ஜெயசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் மூத்த எழுத்தாளர், உலகத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் கல்விப் பிரிவுத் தலைவர், அமைச்சின் ஆலோசகர் கலாநிதி சிவலிங்கம் சதீஸ்குமார்; கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.இ.கருணாகரன்; பேராசிரியர் யோகராசா; பேராசிரியர் மௌனகுரு; கிழக்குப் பல்கலைக்கழக கல்வி, பிள்ளை நலத்துறை தலைவர் கலாநிதி செ.அருள்மொழி; கிழக்குப் பல்கலைக்கழக கிறிஸ்தவ துறைத்தலைவர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெட்ணம்; கிழக்குப் பல்கலைக்கழக ஏனைய துறைத் தலைவர்கள்; சிரேஷ்ட விரிவுரையாளர்கள்; விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
இரத்தினபுரி, பலாங்கொடை, வலேபொடை தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சி.அருள்நேசன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் சிறப்புக் கற்கையைத் தொடர்கின்ற 3ஆம் வருட மாணவராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .