2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘கலைகள் அருகி விட்டன’

Editorial   / 2018 மே 02 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மட்டக்களப்பில் சுமார் 100க்கு மேற்பட்ட கலைமன்றங்கள் இயங்கிய நிலையில், தற்போது ஒருசிலவே செயற்பாட்டிலுள்ளன” என  மட்டக்களப்பு  மாவட்ட கலாசார  இணைப்பாளர்  த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை, ஈஸ்வரா கலைகலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்

மாவட்ட இணைப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பில், 1950 - 1984 வரையான காலப்பகுதியில்  கலைமன்றங்களின் செயற்பாடு உச்சமாகவிருந்தது. ஆனால், 1984க்குப் பின்னர் அச்செயற்பாடு  குறைவடைந்துவிட்டது.

“அன்று 100க்கு மேற்பட்ட கலைமன்றங்கள், அந்தந்த கிராமங்களில் கலைகளை வளர்த்து, உச்சமான நிலைக்குக் கொண்டுசென்றன. அந்நிலைமாறி இன்று கலைமன்றங்கள் அருகிச்சென்றிருக்கின்றன.

“பெற்றோர்கள், பிள்ளைகளை கலைமன்றங்களில் இணைப்பதற்கு தயக்கம்காட்டுவதாலேயே கலைமன்றங்கள் அருகிச்செல்கின்றன.  எல்லாப்பிள்ளைகளும் வைத்தியராக, பொறியியலாளராக அல்லது உயர்ந்த பதவிகளைப்பெற வேண்டும் என்று சிந்திப்பது தவறல்ல. எனினும், அவ்வாறான பிள்ளைகளை ஆளுமையுள்ள, ஆரோக்கியமான, அறிவுத்திறன் கூடிய பிள்ளையாக வளர்ப்பதில்தான் தவறிழைக்கின்றனர்.

“கூத்துக்களில், ஏனைய கலைகளில் ஈடுபடுவதால் பிள்ளைகளின் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்பட்டுவிடும் அல்லது கல்விப் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் தவறாகச் சிந்திக்கின்றார்கள்.

“கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகள் எப்போதும் மீத்திறன் கூடியவர்களாகவே உருவாக்கப்படுகின்றனர். எனவே, பிள்ளைகளை கலைகளுக்குள் இணைப்பதற்கும் பெற்றோர்கள் ஆர்வம்காட்ட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X