2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகரம்: உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும் ஆய்வு நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (20) பி.ப.3.30 மணிக்கு கொழும்பு 02, இல 51 வொக்ஸோல் லேனில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் ஊடகவியலாளர்களும் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர். நூலின் மதிப்புரையை சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீனும் முன்னாள் உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதிர் அவர்களும் நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் முஸ்தீன் மற்றும் தமிழ்மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ.பி.மதன் அவர்களும் நிகழ்த்துவர். நூலின் முதற் பிரதியினை புரவலர் ஹாசிம் உமர் கொள்வார். நிகழ்ச்சியை அறிவிப்பாளர் ஷாமிலா செரீப் தொகுத்து வழங்குவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X