Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 06, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நடத்திய பாரம்பரிய கலாசார விழா நேற்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கஸிதா, நாடகம், பொல்லடி, கோலாட்டம், இஸ்லாமியக் கீதம், நாட்டார்பாடல், பக்கீர் வைத் மற்றும் சிங்கள, தமிழ் பாடசாலைகளின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் பிரதம அதிதி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர் மற்றும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் உதவி செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் ஆகியோரினால் இதில் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago
9 hours ago