Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 ஜூலை 25 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனையின் ஹரீஷாவின், 'உன் மொழியில் தழைக்கின்றேன்' கவிதை நூல் வெளியீட்டு விழா, எழுத்தாளர் மர்ஹீம் எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.
எழத்தாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி. சத்தார் எம்;.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கவிதை நூல் வெளியீட்டு விழாவில், கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும், விஷேட அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியும் கலந்து கொண்டனர்.
குறித்த நூலின் நயவுரையை, ஊடவியலாளரும் எழுத்தாளரும், விமர்சகருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா நிகழ்த்தினார். ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் சமீம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளருமான பஷீர் அப்துல் கையூம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இந்நூலின் முதற் பிரதியை, மருதமுனை பறக்கத் டெக்ஸ் பிரைவட் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட், விஷேட பிரதியை மருதமுனை சறோ பாம்ஸ் பிரைவட் லிமிnடெ; முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன், சிறப்புப் பிரதியை கல்முனை ஏ.எம்.எம். இண்ஜினியரிங் கண்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸம்மில் ஆகியோர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், இந்த மண்டபம் நிறைய பல்துறை சார்ந்த பல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்; சகோதரர்கலோடு தமிழ் சகோதரர்களும் சமூகமளித்துள்ளமை மருதமுனை ஹரீஷாவின் எழுத்துக்குக் கிடைத்த பெரும் அங்கிகாரமாகும்' என்றார்.
தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் இந்த விழாவை நடாத்தி நூலை வெளியிட்டு வைத்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago