Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:59 - 1 - {{hitsCtrl.values.hits}}
கிளி/முருகானந்தா கல்லூரியில் கலைப்பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பங்கயன் தனுஜா அவர்களின் 'ஒரு பூவின் மடல்' எனும் கவிநூல் வெளியீடு முல்லைத்தீவு விசுவமடு மகாவித்தியாலய உள்ளக கலையரங்கத்தில் 19ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்குஇடம்பெற்றிருந்தது.
மங்களவிளக்கேற்றலினை தொடர்ந்து வரவேற்புரையினை விசுவமடு பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் திருமதி கேதினி நிகழ்த்தியிருந்தார்.
தலைமையுரையை யாழ்/ சிதம்பரக்கல்லூரி ஆசிரியர் திரு. க.முருகமூர்த்தி வழங்கியதைத்தொடர்ந்து முல்லைவலய கல்வி பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன வாழ்த்துரையினை வழங்கியதன் பின்னர் வாழ்த்துக்கவியினை கவிஞர் முல்லைத்தீபன் நிகழ்த்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார வடக்கு மாகாண அமைச்சர் த.குருகுலராசா சிறப்புரையினை வழங்கி விழாவை சிறப்பித்து வைக்க,வாழ்த்துரைகளையும்,நூல் வெளியீட்டுரையையும் முறையே கவிஞர் யோ.புரட்சி, ஆனந்தரூபன் மற்றும் விசுவமடு மகாவித்தியாலய ஆசிரியை திருமதி கைலாசநாதன் ஆகியோர். வழங்கினர்.
வடமாகாண அமைச்சர் த. குருகுலராசா ஒரு பூவின் மடல் எனும் கவிநூலை வெளியிட்டு வைக்க முதல்பிரதியினையும் சிறப்பு பிரதியினையும் முறையே விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தன் மற்றும் முல்லைத்தீவு வலயகல்வி பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் ஆகிறோர் பெற்றுக்கொண்டனர்.
மதிப்பீட்டு உரையை முல்லை வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் சி.பீதாம்பரம் வழங்கியதை தொடர்ந்து வாழ்த்துக்கவினை நெடுந்தீவு அரவிந்தன்; நிகழ்த்த, இந் நிகழ்வின் இறுதி நிகழ்வாக ஏற்புரையினை இளம்கவிஞர் பங்கஜன் தனுஜா வழங்க கவிதை நூல் வெளியீட்டு விழா முடிந்தது.
இந்நிகழ்வில், கவிஞர்கள்,எழுத்தாளர்கள் ,கலை இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனு Sunday, 27 May 2018 12:53 PM
சிறப்பு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago