Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புலம்பெயர் வாழ் மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப்பிள்ளையார் ஆலயத் தொண்டர்களுடன் மீசாலை வாழ் இளைய தொண்டர்களும் இணைந்து அனுசரனை வழங்கி நடத்தும் மாபெரும் 'மாவடி நாதம் பாகம்-02' எனும் இறுவட்டு வெளியீடு செவ்வாய்க்கிழமை (09) மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது.
ஓய்வு நிலை அதிபர் அ.கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசியுரையை பிரம்ம ஸ்ரீ சிறி காந்தக்குருக்களும் சிறப்பு ஆசியுரையை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் நிகழ்த்தினர்.
பாடல்கள் வெளியீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் நிகழ்த்தினார்.
இறுவட்டின் முதற்பிரதியை கிருபாலேனஸ் உரிமையாளர் சமூகமாமணி அ.கிருபாகரன் பெற்றார்.
'மாவடி நாதம் பாகம்; 01' கடந்த ஆண்டு ஆலயத்தேர்த்திருவிழாவின் போது வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .