Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
யாழ்ப்பாணம் குப்பிளானில் பிறந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பெங்களுர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைக் கற்று தற்போது பயண ஊடகவியலாளராக செயற்பட்டுவரும் அருளினியனின் 'கேரள டயரீஸ் - வேர்தேடுவோம்' நூல்; மட்டக்களப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.
நூல் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டாளர் கணேசன் திலிப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் மட்டக்களப்பின் மூத்த, பிரபல, இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், எழுத்தாளர் மணிசேகரன,; 'கேரள டயரீஸ் -வேர்தேடுவோம்' நூலுக்கான அறிமுகத்தை வழங்கினார்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு, மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
இறுதியில் நூலாசிரியர் அருளினியன் ஏற்புரை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago