2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

"விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்" கவிதை நூல் வெளியீடு

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஜிப்ரி ஹஸன் எழுதி மாற்றுவெளி பதிப்பகத்தின் வெளியீடான "விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்" கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஓட்டமாவடி உலமா சபை கட்டிடத்தில் இடம்பெற்றது.

கவிஞரும் ஓவியருமான எஸ்.நளீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூல் அறிமுகத்தினை கவிஞர் வாழை இப்னு ஹஸன் வழங்கியதுடன் நூல் மதிப்பீட்டு உரையினை என்.ஆத்மா மற்றும் கவிஞர் அலறி ஆகியோர் நடாத்தினர்.

சிறப்புரையை மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா நிகழ்த்தியதுடன் ஏற்புரையை நூலாசிரியர் ஜிப்ரி ஹாஸன் நிகழ்த்தினார்.  இந்த நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, பிரதேச படசாலைகளின் அதிபர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எழுபது பக்கங்களைக் கொண்ட இந்த கவிதைப் புத்தகத்தில் நாற்பது கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • முஸ்டீன் Sunday, 14 July 2013 04:34 AM

    வாழ்த்துக்கள் ஜிப்ரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .