2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

9 கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,எம்.சுக்ரி)


கலாசார அமைச்சின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவை ஏற்பாடு செய்த 2012ஆம் ஆண்டுக்கான பிரதேச சாஹித்திய விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான எஸ்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலக்கியம், நாடகம், சித்த வைத்தியம், கவிதை உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 9 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது 'ஸம்ஸம்' என்னும் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .