2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

52 வது சைவப்புலவர் மாநாடு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் 52 வது சைவப்புலவர் மாநாடும் பட்டமளிப்பு விழாவும் மட்டக்களப்பில் சுவாமி விவுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் தலைவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நடைபெறும் இம் மாநாடு திருஞானசம்பந்தர் ஆதினகுரு மகா சந்திதானம் ஸ்ரீ சோமசுந்தரம் ஞானசம்பந்தர் பரமாசிறிய சுவாமிகள் முன்னிலையில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பேராதனை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் சீ.பத்மநாதன் மற்றும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் உட்பட முக்கியஸ்த்தர்கள் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள சைவப்புலவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாடு இரண்டு அமர்வுகளாக இன்று மாலையும் நடைபெறவுள்ளதுடள் சிலருக்க சைவப்புலவர் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன
48 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் சைவப்புலவர் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .