2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

268 கலைஞர்கள் கலாபூஷன விருது வழங்கி கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அஸ்ரப் ஏ.சமத்)


28ஆவது வருடமாகவும் 268 கலைஞர்கள் கலாபூஷன அரச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 183 சிங்கள கலைஞர்கள், 60 தமிழ் கலைஞர்கள், 25 முஸ்லிம் கலைஞர்கள் இவ்விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தலைமையில் நேற்று சனிக்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது.
கிராமிய பிரதேச தேசிய கலைஞர்களை இனங்கண்டு  அவர்களுக்குரிய அரச விருதுகளை  கலாசார திணைக்களமும் முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் இந்து கலாசாரத் திணைக்களமும் இணைந்து ஒவ்வொரு வருடமும் வழங்கிவருகின்றது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களான இக்கலைஞர்களுக்கு  விருது, சான்றிதழ்களுடன்  10,000 ரூபா பணமும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைசச்ர் டி.பி.ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், அமைச்சின் செயலாளர்  எம்.கே.பி.திஸாநாயக்க, கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் ஹூனுகல,  பணிப்பாளர்கள் சாந்தி நாவுக்கரசு, வை.எல்.எம்.நவவி,  புரவலர் ஹாசீம் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க, 

'ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர்களை கௌரவிப்பதற்கும் அவர்களது மேம்பாண்டுக்கும் எதிர்வரும் வருடத்தில் 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கித் தந்துள்ளார். அத்துடன் மருதாணை எலிபன்டன் திரையரங்கினை திருத்தியமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களுக்கு நேரடியாகச் சென்று உதவும்படி எனது அமைச்சின் செயலாளாரைப் பணித்துள்ளார். அவர்களது  மரணம் மற்றும்  கலை செயற்பாடுகளுக்கு நிதியம் ஒன்றை ஏற்படுத்துமாறு என்னைப் பணித்துள்ளார்' என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .