2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'விஞ்ஞான ஊக்கி' நூல் வெளியீட்டு விழா

Sudharshini   / 2015 ஜூலை 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல் லாபீர்

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியையான திருமதி.யோகேந்திரி சுகுந்தனின் 'விஞ்ஞான ஊக்கி'  தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலான நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (19) யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி பிரதான மண்டபத்தில் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நூலின் முதற்பிரதியை எஸ்.ஆர்.சத்தியேந்தன்பிள்ளையும் (ஆங்கிலம்), கலாநிதி திருமதி.ச.நாகேந்திரன் (தமிழ்), பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம், கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமாரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் உரையாற்றும் போது, வடமாகாணத்தில் விஞ்ஞான பாட  பெறுபேறுகள் அதிருப்தி அளிக்கின்றது. யாழ். பல்கலைக்கழகத்துக்கு தென்மாகாண மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த காலங்களைப் போல் விஞ்ஞான பாடம் சிறப்பானதாக அமைய அனைவரது செயற்பாடும் அவசியமானதாகும் என தெரிவித்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X