2025 ஜனவரி 04, சனிக்கிழமை

'எரிகிறது பலஸ்தீனம்' நூல் வெளியீடு

Sudharshini   / 2015 ஜூலை 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
 
ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கட்டுரையாசிரியரும் ஆசிரிய ஆலோசகருமான அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூரின்  'எரிகிறது பலஸ்தீனம்' எனும் நூல் வெளியிட்டு விழா, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் சனிக்கிழமை (25) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
 
மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழா, அட்டாளைச்சேனை கலை மற்றும் இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழ பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இந்நிகழ்வில் நூலுக்கான மதிப்பீட்டுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீனும் வரவேற்புரையை ஆசுகவி அன்புடீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X