2025 ஜனவரி 04, சனிக்கிழமை

குறும்பட விருது விழா

Sudharshini   / 2015 ஜூலை 20 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

அட்சரம் ஏற்பாட்டில் ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருது விழா சனிக்கிழமை (18) மாலை யாழ். பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநரும் ஓவியருமான ட்றொஸ்கி மருது மற்றும் இயக்குநர் கவிதா பாரதி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தினை வெள்ளம் (விமல்ராஜ்),  இரண்டாம் இடத்தினை கடிநகர் (சஜீத்), மூன்றாம் இடத்தினை தொடரி (மதிசுதா) ஆகிய குறும்படங்கள் பெற்றுக்கொண்டன.

தனியாள் விருது பெற்ற குறும்படங்களாக  சிறந்த கதைக்கான விருது - சூசைட், சிறந்த இயக்குநர் விருது - கடிநகர் , சிறந்த நடிகருக்கான விருது - போலி  , சிறந்த ஒளிப்பதிவாளர் விருது - வெள்ளம்,  சிறந்த இசைக்கான விருது - ஏன் இந்த இடைவெளி, சிறந்த படத்தொகுப்புக்கான விருது - சூசைட் , சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது - வெள்ளம்,  தேவதை,  சிறப்பு விருது - ஏன் இந்த இடைவெளி ஆகிய குறும்படங்கள் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X