Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 04, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
மாளிகைக்காடு மண்ணின் மைந்தர்களுக்கு மகுடம் சூட்டி கௌரவிக்கும் நிகழ்வும் மாளிகா சிறப்பு மலர் வெளியீட்டு விழாவும் மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய சதுக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றன.
மாளிகா அபிவிருத்திச் சபையின் தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்ற, க.பொ.த.சாதாரண தரத்தில் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற, அரபுக் கலாசாலைகளில் கல்வி கற்று அல்-ஹாபில் மற்றும் அல்-ஆலிம் பட்டங்களைப் பெற்றவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களும், மற்றும் பள்ளிவாசல் பணிகளில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களும் இதன்போது நினைவுச்சின்னம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாளிகா அபிவிருத்திச் சபையினால் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்கள் பொன்னடை போத்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த்;, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஓய்வுபெற்ற கல்வியியலாளர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்-இய்யதுல் உலமா சபை தலைவர் யூ.எல்.எம்.காசிம்(கியாதி), காரைதீவு பிரதேச சபை செயலாளர் எஸ்.நாகராஜா, அல்- ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.சீ.எம்.நதீர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள்;, மாணவர்கள், பெற்றோர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago