2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

கலை கண்காட்சி

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இவ்வுலகம் கலையின் இருப்பிடம். அந்த அற்புதக் கலையே இவ்வுலகை அழகுபடுத்துகிறது. இது இறைவனால் படைக்கப்பட்ட ஓர் அற்புதம். என்னைப் பொறுத்தவறையில் நான் ஒவ்வொரு மனிதனையும் கலையுணர்வுடனேயே பார்க்கிறேன். ஒவ்வொரு உலகப்பொருளும் உயிரும் உணர்வுகளும்கூட ஒரு கலையே! இதுவே இவ்வுலகை பசுமைப்படுத்துகிறது' என்கிறார் ஓவியர்; நளீம் லதீப்.

கல்முனை, சாய்ந்தமருதை சேர்ந்த இவர், ஆசிரியர், எழுத்தாளர், கலைஞர், அரசியல் விஞ்ஞானதுறை பட்டதாரி என பல பரிமாணங்களுடன் தனது கலை பயணத்தை தொடர்கிறார்.

இந்நிலையில் இவரது கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கமு/ மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பென்சிலை மட்டும் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள், தன்னால் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்ட கலைப்பொருட்கள், சேகரிக்கப்பட்ட முத்திரைகள், மிகப்பழமையான இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், முன்னோர் பயன்படுத்திய பொருட்கள், உயிர்ப்பிராணிகள் என மாணவர்களின் கல்வியாற்றலை அதிரிகரிக்கும் வகையில் ஐந்து பிரிவுகளாக இக்கண்காட்சி நடத்தப்பட்டது.

இக்கலைப் பொருட்களானவை, கழிவுப் பொருட்களான கற்கள், கடல் பொருட்கள், பழமைமிகு சங்குகள், சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகள், மரங்கள், மரங்களின் கிளைகள், வேர்கள், கண்ணாடித்துண்டுகள், பலதரப்பட்ட கழிவுப் பொருட்களினால் படைக்கப்பட்டுள்ளன.

இவற்றை இக்கலைப் பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை இக்கலைப் பொருட்களுக்குள்ள விசேட அம்சமாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .