2025 ஜனவரி 04, சனிக்கிழமை

இலங்கை சர்வதேச பல்கலைக்கழக நகர விழா-2015

Gavitha   / 2015 ஜூன் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுதர்ஷினி, வி.நிரோஷினி

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய உலக மட்ட தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையில், பல்கழைக்கழக சந்தைப்படுத்த முகாமைத்துவம் சீரமைக்கும் முறைமை திணைக்களம்,  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கழைக்கழகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணிகம் என்பவற்றுடன் இணைந்து 'இலங்கை சர்வதேச அனைத்து பல்கலைக்கழக நகரவிழா 2015' நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு, ஜூன் மாதம் 11,12, ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெறவுள்ளது. முதலாம் நாளில் கொழும்பு நகர விழா நடைபெறும். இதன்போது, பங்குபற்றுவோர் கொழும்பு நகரின் முக்கிய இடங்களை பார்வையிடுவர்.

அடுத்த நாளை பயனுடையதாக்குவதற்காக அவர்கள் அழகிய கித்துல்கல நகருக்கு செல்வர்.

இந்த நிகழ்வில் ஜரோப்பிய, ஆசிய நாடுகளை சேர்ந்த 25 பேரும் இலங்கை பல்கலைக்கழகத் முறைமையிலிருந்து 75 பேரும் பங்குபெறுவர்.

இவ்வாறான நிகழ்வு, வருடந்தோறும் நடைபெறும். இதனால், இது உலக பல்கலைக்கழக முறைமையின் நாட்காட்டியில் திகதி குறிப்பிடப்படும் நிகழ்வாகும் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக தலைவர் ரோஹந்த அத்துகோரல கூறினார்.

இந்த முதலாவது நிகழ்வு இது போன்ற அதிவிசேட நிகழ்வுகளை வேறுபல தரப்புகளும் ஒழுங்கு செய்ய ஊக்குவிக்கும். இது நாட்டுக்கு அவசியமானதாகும்.

இலங்கை சர்வதேச பல்கலைக்கழக நகர விழா-2015 பற்றிய மேலதிக விவரங்களுக்கு றறற.ளவசயபெநசள.டம  என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்கவும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X