2025 ஜனவரி 04, சனிக்கிழமை

மூன்றாம் முத்தம் குறுநாவல் வெளியீடு

Sudharshini   / 2015 மே 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

அரியாலையூர் செல்வி மிசாந்தி செல்வராஜாவின் மூன்றாம் முத்தம் குறுநாவல் நூல் வெளியீட்டு விழா  யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

இந்நிகழ்வில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயலாளர் எஸ்.புலேந்திரராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நூலை வெளியீட்டு வைத்தார்.

நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை வட மாகாண கல்வி அமைச்சின் அபிவிருத்தி அலுவலர் செல்வி.து.தசோனியா நிகழ்த்தினார்.

ஆசியுரையை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் நிகழ்த்தினார். நூல் அறிமுக உரையை புலோலியூர் வேல் நந்தகுமார் நிகழ்த்த, வெளியீட்டுரையை நல்லூர் பிரதேச செயலக கலாசார அலுவலர் திருமதி ரஜனி குமாரசிங்கம் நிகழ்த்தினார்.

நயப்புரையை ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மீரா அருள்நேசன், மதிப்பீட்டுரையை இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஓய்வுநிலை பணிப்பாளர் ஏ.தர்மகுலசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X