Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 04, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 27 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா தமிழ்ச்சங்கமும் செந்தணல் வெளியீட்டகமும் கனகராயன்குளம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாணவி பிரபாகரன் வேதிகா எழுதிய கண்ணாடிப்பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (24) கனகராயன்குளம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா தமிழ்ச் சங்க நிறுவுனரும் செயலாளருமான தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா மற்றும் மாணவி சரண்யா ஆகியோரின் ஆத்ம சாந்தியடைய வேண்டி நினைவுப் படங்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், பாடசாலை மாணவிகளால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
வரவேற்புரையை பாடசாலை ஆசிரியர் சிறிகுமரனும், ஆசியுரையை நெடுங்கேணி பிரதேச செயலாளர் இ.பரந்தாமனும் வாழ்த்துரையை வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன் ஆகியோர் நிகழ்த்தினார்.
வவுனியா கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் தொடக்க உரையையும் செந்தணல் வெளியீட்டக இயக்குநர் கவிஞர் வன்னியூர் செந்தூரன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர்.
நூலின் முதற்பிரதியை பிரதேச செயலாளர் இ.பரந்தாமன், பாடசாலை பிரதி அதிபர் எஸ்.சுகந்தன், வவுனியா தமிழ்ச் சங்க செயலாளர் தமிழருவி சிவகுமாரன் ஆகியோர் வெளியிட்டு வைக்க கனகராயன்குளம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர் ச.சதானந்தன் பெற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago