2025 ஜனவரி 04, சனிக்கிழமை

திருமறைக் கலாமன்றத்தின் வைகாசித்திங்கள் பொற்தூறல்

Thipaan   / 2015 மே 26 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் விழா ஆண்டை முன்னிட்டு திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற 'பொற்தூறல'; நிகழ்ச்சித் தொடரின் இம்மாதத்துக்கான நிகழ்வு 'வைகாசித்திங்கள் பொற்தூறல்' என்னும் பெயரில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபரும், கவிஞருமான சோ.பத்மநாதன் கலந்துகொள்கிறார்.

யாழ்ப்பாண 'சாகித்ய வீணா லயா' வழங்கும் 20 வீணைக் கலைஞர்களின் பங்கேற்பில் திருமதி. விதுஷா கோபிக்கிருஷ்ணாவின் நெறியாள்கையில் விரலிசை நாதம் நிகழ்வும், திருமதி பத்மினி செல்வேந்திரகுமரின் நெறியாள்கையில் உரும்பிராய் 'கலைக்கோவில'; மாணவர்கள் வழங்கும் நாட்டிய நாடகமும் இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X