2025 ஜனவரி 04, சனிக்கிழமை

பாரதி கலை மன்றத்தின் 33ஆவது ஆண்டு விழா

Thipaan   / 2015 மே 25 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தின் 33ஆவது ஆண்டு விழா நிறைவு, சுப்பையா அரங்கு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

பாரதி கலைமன்ற தலைவர் த.விமல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு கமலராஜ் சர்மா ஆசியுரை வழங்கினார்.

தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப் பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமன்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நாடகங்கள் மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கலைஞரால் அபிநய நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் போது, சுழிபுரம் பெரியபுலோ அண்ணா சனசமூக நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கவென காணி கொள்வனவு செய்யும் பொருட்டு, புலம்பெயர் வாழ் அன்பராக எஸ்.ரவிசங்கரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி கலைமன்றத்தின் தலைவர் த.விமலிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். பல்கலைக் கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், சங்கானை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி நிருபா காசிநாதன், சுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் வி.சிவராமன், சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்துகொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X