2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் மன்ற நிகழ்வு

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு  அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் மன்ற நிகழ்வு நாட்டாரியல் என்ற மகுட வாசகத்தில் மன்றத் தலைவர் ஆசிரியை திருமதி சதிஸ்குமார் தலைமையில் இன்று சனிக்கிழமை(16) இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு  அரசினர் ஆசிரியர் கலாசாலை முதல்வர் ஏ.எஸ்.யோகராஜா கலந்து சிறப்பித்தார்.

கருத்துரையை நிருவாகத்துக்குக் பொறுப்பான பிரதி முதல்வர் செல்வி அமுதா நாகலிங்கம் நிகழ்த்தினார்.

ஆய்வுரையை நாட்டாரியல் மரபும் மாற்றங்களும் என்ற தலைப்பில் விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா நிகழ்த்தியதுடன் கலை நிகழ்வுகளையும் நெறிப்படுத்தினார்.

நாட்டுப்புற நடனம், நாட்டார் பாடல்கள், மனதைப்பாதிப்பது அதிகம் அன்பா கோபமா என்ற தலைப்பில் விவாத அரங்கு, சமுதாயம் என்ற தலைப்பில் கவிதா நிகழ்வு முதலான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ் முத்தமிழ் மன்ற நிகழ்வுகளில் ஆசிரிய மாணவர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .