2025 ஜனவரி 01, புதன்கிழமை

கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2015ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கலைத்துறையில் விஷேட பங்களிப்பு வழங்கி வரும் 60 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களிடமிருந்தே கலாபூஷண விருது பெறுவதற்க்கான விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருகியியுள்ளது.

விண்ணப்படிவங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தில் இருந்தோ தங்கள் பகுதி மாவட்ட பிரதேச செயலகங்களிலிருந்தோ பெற்றுக் n;காள்ள முடியும்.

விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி பிரதேச செயலாளர் சிபார்சுடன் 25.06.2015ஆம் திகதிக்கு முன், பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இல. 180, டி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு-10 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கோரியுள்ளது.

பிரதேச செயலாளரினால் சிபார்சு செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதினையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு  011-2691864 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X