2025 ஜனவரி 01, புதன்கிழமை

உலகம் தமிழ் கவிதையை இரசிக்கின்றது

Kogilavani   / 2015 மே 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

'மேலைத்தேயம், கீழைத்தேயம் என்னும் வகையில் கலாசாரம் மாறுபடுகின்ற போது ஒவ்வொருவரும் வாழ்வை பார்ப்பதற்கு ஏற்ப வேறுபாடுகள் உள்ளன. அவற்றுக்கேற்ப  கவிதைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றது. இன்று உலகம், தமிழ்க் கவிதையை பார்ப்பதாக உள்ளது. எங்களுடைய கவிதையில் உள்ள ரசனையை ரசிக்க ஆரம்பித்து உள்ளனர்' என பருத்தித்துறை பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலன் தெரிவித்தார்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தெல்லிப்பழை பிரதேச கலசார பேரவை ஒழுங்குபடுத்தி நடத்திய கவிதைப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கம் நிகழ்வு சனிக்கிழமை (09) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கவிதைக்கு எப்போதும் முக்கியத்துவம் உள்ளது. கவிதை பற்றிய ஒவ்வொருவர் பார்வையும் வேறுபடுகின்றது. எமக்கு கிடைக்கின்ற நேரத்தில் எமது பார்வைக்கு ஏற்ற வகையில் உணர்வுகளுக்கு  ஏற்ற வகையில் கவிதை படைக்கப்படுகின்றது.

கவிதையின் பரிணாமம் மாறுபட்டுள்ளது. புதுக்கவிதை என்பதை தாண்டி இன்று நவீன கவிதைகள் வந்துவிட்டன. பாரதியார் காலத்தில் வசனக்கவிதை வந்துவிட்டது. இன்று மேலைத்தேய கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு கவிதை படைக்கப்படுகின்றன என்ற விமர்சனம் காணப்படுகின்றது. ஆனால் ஒவ்வொருவருடைய இரசனையும் வேறுகின்றது.

கவிதையில் சட்டம் போடமுடியாது. அது ஒரு கலை வடிவமாகும். எழுதுகின்றவர்களை பொறுத்து அது அமைகின்றது. நாம் எமக்கு தேவையானவற்றை எடுத்து கவிதை படைக்க வேண்டும். நல்ல இரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் பலவற்றை படித்து கவிதை இரசனையுள்ளவர்களாக மாற வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X