2025 ஜனவரி 01, புதன்கிழமை

சத்தியசாயி பாடசாலையின் தமிழ்த்தின விழா

Thipaan   / 2015 மே 06 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

மானிப்பாய் சத்தியசாயி பாடசாலையின் தமிழ்தின விழா, பண்பு விருத்தி மாணவர் மன்றத் தலைவர் வ.நிரூபன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

சத்தியசாயி பாடசாலையின் பணிப்பாளர் நீதிபதி ஆர்வசந்தசேனன், அதிபர் திருமதி ப.பத்மநாதன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆசிரியர் பா.காசிநாதன் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு விழாவை நெறிப்படுத்தினார். முந்நூறு மாணவர்களுடன் மானிப்பாயில் இயங்கும் இப்பாடசாலை தனியார் பாடசாலையாக   செயற்படுகின்றது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலக்கற்கைகள் இந்தப் பாடசாலையில் காணப்படுகிறது. அரச பாடசாலை கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் விழுமியப் பண்புகளை வளர்த்தெடுக்கக்கூடிய மனித நேயக் கல்வியையும் இங்கு போதிக்கின்றனர்.

சாத்வீக குணம் மேலோங்குகைக்காக சைவபோசன உணவே இங்கு மாணவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது. அத்தகைய மாணவர்களே இங்கு கல்வி கற்கின்றனர்  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X