2025 ஜனவரி 01, புதன்கிழமை

குறை ஒன்றும் இல்லை நூல் வெளியீடு

Sudharshini   / 2015 மே 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், தலைமன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.சிவானந்தன் (துறையூரான்) எழுதிய ''குறை ஒன்றும் இல்லை''நூல் வெளியீட்டு விழா, மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் திங்கட்கிழமை (04) மன்னார் கலையருவி நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தலைமையுரையினை அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரும் வெளியீட்டுரையினை கவிஞர் மன்னார் அமுதனும் ஆய்வுரையினை நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயனும் நிகழ்த்தினர்.

பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த  மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் மற்றும் நூலாசிரியர்  எம்.சிவானந்தன்(துறையூரான்) ஆகியோர் நூலை வெளியீட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கல்விமான்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X