Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 01, புதன்கிழமை
Thipaan / 2015 மே 02 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
பள்ளிக்குடியிருப்பு கவிஞர் ஏ.எல்.காலத்தீன் எழுதிய 'தாயே உன்னை தாலாட்டுகிறேன்' நூல் வெளியீட்டு விழா பள்ளிக்குடியிருப்பு திறந்த வெளியரங்கில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.
ஏ.எம்.சஹிட் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மௌலவி எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி, பள்ளிக்குடியிருப்பு பிரதேச சபை உதவி தவிசாளர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
'தாயே உன்னை தாலாட்டுகிறேன்' நூலின் முதல் பிரதியினை, அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இரண்டாம், மூன்றாம் பிரதிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
மேலும் ஏனைய பிரதிகள், இந்த நிகழ்வின் பிரம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
31 Dec 2024