2025 ஜனவரி 01, புதன்கிழமை

'தம்பிலுவில் ஜெகாவின் விடைதேடி' கவிதை நூல் வெளியீட்டு

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 'தம்பிலுவில் ஜெகாவின் விடைதேடி' எனும் கவிதைத்தொகுதி சனிக்கிழமை (25) திகதி தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் சோ.இரவீந்திரன் தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கவிதை நூலை வெளியீட்டு வைத்திருந்தார்.

கவிதை நூலின் முதல் பிரதியை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்தவ பீடம் (தலைவர்) செ.குணபாலன், நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இக்கவிதை நூலின் நயவுரையை, செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் செய்திருந்தார். வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி சு.இராஜேந்திரா, சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜன்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் றமிஸ் அப்துல்லா மற்றும் விஷேட, கௌரவ, இலக்கிய அதிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தம்பிலுவில் ஜெகா எனும் புனைப் பெயரில் திருமதி ஜெகதீஸ்வரி நாதன் ஆசிரியை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கவிதைத் துறையில் தனக்கெ ஒரு இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டு மரபுக்கவிதை, புதுக்கவிதை என எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X