2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மேடை ஒன்று நிகழ்வு மூன்று

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநகர சபையுடன் மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் பௌர்ணமி கலை நிகழ்வின் தொடர்ச்சியாக மேடை ஒன்று நிகழ்வு மூன்று என்ற இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை  நடைபெறுகின்றது.

யாவரும் பேசலாம் -கிழக்கிலங்கை எழுத்தாளர்களின் ஒன்றுகூடல், ஜீவகுமாரனின் மூன்று நூல்களின் அறிமுகம், அரங்க ஆய்வு கூட மாணவர்களின் அளிக்கை ஆகிய நிகழ்வுகளில், முதல் நிகழ்வாக கிழக்கிலங்கையின் அடையாளத்தை முன்நிறுத்திய கலை இலக்கியப்படைப்புகள் அன்றும் இன்றும், கிழக்கிலங்கை எழுத்தாளர்களின் ஒன்றுகூடல் திருக்கோவில் கவியுகனின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுரு, மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, எழுத்தாளர் திருமலை நவம் ஆகியோர் வழிப் படுத்துனர்களாக கலந்து கொள்கின்றனர். அதே நேரம் கிழக்கிலுள்ள எழுத்தாளர்கள் பங்கு கொள்கின்றனர்.

அடுத்து மாலை 4 மணிக்கு ஜீவகுமாரனின் மூன்று நூல்களின் அறிமுகம் மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் மைக்கல் கொலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பேராசிரியர் சிஇமௌனகுரு தலைமையேற்கிறார். மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் முதன்மை அதிதியாகக்கலந்து கொள்கிறார்.

ஜீவகுமாரன் கதைகள் நூலுக்கான விமர்சன உரையினை எழுத்தாளர் திருமலை நவமும் கடவுச் சீட்டு நாவலுக்கான விமர்சன உரையினை பேராசிரியர் செ.யோகராசாவும் ஜேர்மானிய கரப்பான் பூச்சிகள் நூலுக்கான விமர்சன உரையினை அ.ச.பாய்வாவும் நிகழ்த்துகின்றனர்.

இறுதியில் ஏற்புரையும், புலம்பெயர் இலக்கியம் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறும்.
மாலை நிகழ்வாக மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தின் கலை நிகழ்வுகள் நடைபெறும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .