2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாரம்பரிய கலைகளின் கூத்து விழா

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கூத்து விழா, வெள்ளிக்கிழமை (27) மாலை கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மைதானத்தில் நடைபெற்றது

இளம் தலைமுறையினர் மத்தியில் மட்டக்களப்பின் பாரம்பரிய கலையான கூத்துக்கலையை கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது அதிதிகள் பண்பாட்டு வாத்தியங்கள் முழங்க விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கூத்துப்பெருவிழானை சிறப்பிக்கும் வகையில் நொஞ்சிப்போடியார் களரியில் கூத்து நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கல்லடி கல்வி அபிவிருத்தி சங்க அங்கத்தவர் க.குருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .