2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

குமரிவேந்தனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை குமரித்தமிழ்ப் பணி மன்றத்தின் நிறுவுனர் நா.வை.குமரிவேந்தன் எழுதிய 'உலக உயர்தனிச் செம்மொழி செந்தமிழ்', 'தமிழர் இலக்கிய இலக்கணம் (ஓர் அறிமுகம்)', 'தமிழர் மெய்யியல் கோட்பாடு' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் 96 நூலகங்களுக்கு நூல்களும் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்வில், வரவேற்புரையை கரைச்சி பிரதேசசபைத் தலைவர் நா.வை.குகராசா, தலைமையுரை, வாழ்த்துரைகளைத் தொடர்ந்து நூல்களின் வெளியீட்டில் முதற்படிகள் பெறுதல் இடம்பெறும்.

நூல்களின் வெளியீட்டுரைகளையும் மதிப்பீட்டுரைகளையும் விழாவில் முதன்மை விருந்தினர்களாக கலந்துகொள்ளும் தமிழறிஞர்கள் நிகழ்த்துவர்.  விருந்தினர் உரையைத் தொடர்ந்து யாழ்.மாவட்டத்திலுள்ள கல்லூரிகள், பாடசாலைகளின் 96 நூலகங்களுக்கான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன.

செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், யாழ்.இந்தியத் தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராசன், திருவாட்டி சாந்தி நடராசன், வடக்கு மாகாணசபை கல்வி அமைச்சர் த.குருகுலராசா, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வவுனியாத் தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகச் செயலாளர் மா.கணபதிப்பிள்ளை, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் நி.யோண் குயின்ரசு, யாழ்ப்பாணக் கல்லூரியின் முதல்வர் முனைவர் தாவீது சதானந்தன் சொலமன் அடிகளார், நெடுந்தீவு ஊர்மன்றத்தலைவர் புலவர் அ.வெ.அரியநாயகம் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .