2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தின போட்டிகளில் வெற்றியீற்றியவர்களுக்கு பரிசளிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அக்கரைப்பற்று வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டியின் பாடசாலை மட்ட போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) பாடசாலை திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

பாடசாலை தமிழ் மொழித்துறை இணைப்பாளர் ஜே.வஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் எம்.சரிப்தீன், உயர்தரப்பிரிவு வலயத் தலைவர் இஷ்ஷெய்க் யு.கே.அப்துர்றஹிம், ஆசிரியர்களான எம்.ஐ.இஹ்ஜாஸ், எம்.எஸ்.நிஹால் முகம்மட், எம்.எப்.முஸ்பிறா, எம்.எல்.ஏ.றவூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, சிறுகதை, விவாத அரங்கு மற்றும் பேச்சுப் போட்டிகளில்; முதலிடம் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய அதிபர்,

'பாடசாலை மாணவர்கள் பாடசாலைக் கல்வியுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கூடுதலான ஆர்வத்தை காட்ட வேண்டும்.

இவ்வாறான போட்டிகளில் ஈடுபடுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களை தேடலுள்ளவர்களாக மாற்றி எதிர்காலத்தில் ஒரு சிறந்த நற்பிரஜையாக திகழ்வதுடன் அறிவு ரீதியான சிறந்த தங்களை வளர்த்துக் கொள்ளவும்  முடியும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X