2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மூன்று நூல்களின் அறிமுக விழா

Sudharshini   / 2015 மார்ச் 04 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

திருமதி மைதிலி தயாபரன் எழுதிய சொந்தங்களை வாழ்த்தி (நாவல்), வாழும்காலம் யாவிலும் (நாவல்) மற்றும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் (கவிதை) ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

யாழ். இலக்கியக் குவியத்தின் தலைவர் வேலணையூர் தாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நூல்களுக்கான வாழ்த்துரையை கவிஞர் எஸ்.சத்தியபாலனும் அறிமுக உரையை சு.சிறீக்குமரனும் ஆய்வுரைகளை சி.ரமேஸ், க.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X