2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஜெனீவாத் தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் நூல் வெளியீடு

Sudharshini   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் 'ஜெனீவாத் தீர்மானமும் மெய்ந்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு' என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் வெளியிட்டு வைத்தார்.

நூலுக்கான ஆய்வுரையை எழுத்தாளர் என்.நிலாந்தன் நிகழ்த்தியதுடன் வெளியீட்டுரையை நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, விநோநேகராதலிங்கம், நல்லை ஆதீன முதல்வர் சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X