2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

கூத்து பயிற்சி பட்டறை ஆரம்பம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்


பேராசிரியர் சி.மௌனகுருவின் ஆரங்க ஆய்வுகூடத்தின் ஏற்பாட்டில், கூத்துப் பயிற்சிநெறி, சனிக்கிழமை பகல் (21) மட்டக்களப்பு, பார் வீதியில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.


ஆர்வமுடைய இளம் தலைமுறையை கூத்து, செயல் முறை, கோட்பாடு, புத்தாக்கங்களில்  பாண்டித்தியம் உள்ளவர்களாக்குவதை நோக்காகக் கொண்டு அரங்க ஆய்வுகூடம் ஆறுமாத காலப்பயிற்சி நெறியை இலவசமாக நடத்தவுள்ளது.


இப்பயிற்சி நெறியை பேராசிரியர் சி.மௌனகுரு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவிமார்களின் துணையுடன் நடத்தவுள்ளார்.


பயிற்சியின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவிமார்களுடனான கலந்துரையாடல்களும் காலம் சென்ற பிரபல்யமான அண்ணாவிமார்களுடன் (உதாரணம்- நாகமணிப்போடி, செல்லையா, நோஞ்சிப்போடி, நல்லலிங்கம்) கடந்த 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட  உரையாடல்களின் காணொளிக் காட்சிகளும் இடம்பெறும் என்று பேராசிரியர் சிமௌனகுரு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில்;,  அமெரிக்கரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியருமான பேர்னாட் பேட் கலந்துகொண்டார்.


அத்துடன், மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த இசை நடனக்கல்லூரி விரிவுரையாளரகள்,  அண்ணாவியார்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


அறிமுக நிகழ்வில் அமெரிக்கரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியருமான பேர்னாட் பேட் இலக்கியம், இதிகாசங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழில் உரையாற்றியமை சிறப்பம்சமாகும்.   


இப்பயிற்சியில் 40 கூத்து ஆர்வலர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கூத்தை அறிதல்-பயில்தல்-ஆக்கல், புதிய பரிமாணங்களில் வளர்த்தல் என்ற வகையில் ஆறு மாத காலப் பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .