2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஓவியக்கண்காட்சி

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமறைக் கலாமன்ற ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வருகின்ற இளம் ஓவியரான சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை (21) காலை 10.00 மணிக்கு இல.15, றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக்கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஈழத்தின் மூத்த ஓவியரான ஆசை இராசையா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஓவியக்கண்காட்சியை திறந்து வைப்பார்.

சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி கல்வி வலய, கல்வி அபிவிருத்திப் பிரதிப் பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்.

சர்மலா சந்திரதாசன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். சிறுவயது முதல் ஓவியக் கலையில் ஆர்வம் மிக்கவராக இருந்த இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்றதுடன், தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

இலங்கையில் பல்வேறு ஓவியப்போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுள்ள இவரின் ஓவியம் கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற 'Camlin art Competition' இல் மாணவர்களுக்கான பிரிவில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.   

இந்த ஓவியக்கண்காட்சி எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X