2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

சீனித்தம்பி போடியார் ஞாபகர்த்த விருது வழங்கலும் விஞ்ஞான வினாவிடைகள் நூல் வெளியீடும்

Kogilavani   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சீனித்தம்பி போடியார் ஞாபகர்த்த சாதனையாளர் விருது வழங்கலும் விஞ்ஞான வினாவிடைகள் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியில் இடம்பெற்றது.


சீனித்தம்பி போடியாரின் 25வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதேசத்தில் பல்வேறு துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்து இலைமறை காய்களாக காணப்பட்ட பெருமைக்குரியர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு  தெரியப்படுத்தும் முகமாக சீனித்தம்பி போடியார் குடும்பத்தினர் அமரா கல்லூரியுடன் இணைந்து சாதனையார் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.


ஆசிரியர் இரத்தினசிங்கம் நயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறந்த மனிதாபிமானம் உள்ள வைத்தியரான தங்கராசா சுத்தானந்தம், சிறந்த கல்வி நிர்வாகியான பரமேஸ்வரி இளங்கோ, சிறந்த அதிபரான தோலிப்போடி சீவரெத்தினம், சிறந்த சமூக ஆர்வலரான பொன்னுத்துரை சாம்பசிவம், சிறந்த மாணவ வளவாளருக்கான அதிபரான தங்கநாயகி பாலசுப்பரமணியம் சிறந்த முகாமைத்துவத்திற்கான அதிபரான வடிவேல் கந்தசாமி சிறந்த பிரதேச நிருவாகியான உருத்திரன் உதயஸ்ரீதர், சிறந்த மாணவ எழுச்சியாளரான எஸ்.எஸ். அமல் மற்றும் இளம் ஊடகவியலாளர் பேரின்பராஜா சபேஷ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் ஆசிரியர் இரத்தினசிங்கம் நயணன் எழுதிய விஞ்ஞான பொது வினா விடைகள் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் சிறந்த பொறுபோறு பெற்ற மாணவி கௌரவிக்கப்பட்டார்.


அமரா கல்லூரியில் விஞ்ஞான போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .