Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.விஜயவாசகன்
சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா ஆண்டின் உள்ளூராட்சிவாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிறைவு நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (30) மன்ற தவிசாளர், இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நகராட்சிமன்ற பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது.
உள்ளூராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 'பொன்விழா ஆண்டு உள்ளூராட்சிவார சிறப்புமலர் 2014' வெளியீடு நிகழ்வும் மாணவர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கோ.ஜக்சீல், தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் கு.கிருஸ்ணகுமார், உட்பட பலர்கலந்து சிறப்பித்தனர்.
இந்திய துணைத்தூதரகத்தினால் நூலகங்களுக்கு வளங்கப்பட்ட ஒரு தொகுதி நூல்களை மாகாணசபை அவைத்தலைவர், நகரசபை தவிசாளர் மற்றும் இ.தேவசகாயம்பிள்ளையிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago