2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

சிலப்பதிகாரத்தில் உளவியற் பார்வை நூல் வெளியீடு

Gavitha   / 2015 ஜனவரி 25 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்


சிலப்பதிகாரத்தில் உளவியற் பார்வை எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (24) பழுகாமம் திருக்குறள் முன்னணிக்கழக மண்டபத்தில் கழகத்தின் தலைவர் எஸ்.ரவிச்ச்திரன் தலைமையில் இடம்பெற்றது.


தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் உள்ள  இருக்கின்ற உளவியற் தன்மைகளை வெளிப்படுத்தும் முகமாக பழுகாமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரினால் இந்நூல் வெளியிடப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம்; கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை கலந்து கொண்டார்.


இதன்போது, நூல் நயவுரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கவிஞருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் நிகழ்த்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X