Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2015 ஜனவரி 23 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.வித்தியா
யாழ்.மாநகர சபை, செயல்திறன் அரங்க இயக்கம் ஆகியன இணைந்து, தனி நடிப்பு போட்டி, ஒருநாள் அரங்காற்றுகைத் திருவிழா – 2015 என்ற நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
நாடகக் கலையை மீளெழுச்சிக்கு உதவும் முகமாக யாழ்ப்பாண மாநகர சபையும் செயல் திறன் அரங்க இயக்கமும் இணைந்து 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' எனும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஒரு அம்சமாக பிரமாண்டமான தனி நடிப்பு போட்டி ஒன்றை நடத்தி, அதனைத் தொடர்ந்து ஒருநாள் அரங்க ஆற்றுகை திருவிழாவையும் நடத்த தீர்மானித்துள்ளனர்.
போட்டியில் பங்குபற்றுபவர்கள் தாம் விரும்பிய நிஜமான கதை சம்பவம் நிகழ்வு புராண இதிகாச கதையொன்றை காட்சியமைப்பு இசை, ஒலி மற்றும் ஒளியமைப்புடன் நடித்து காட்டுதல் வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திறந்த போட்டி என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் ஆண்,பெண் இருபாலாரும் பங்குபற்றலாம்.
போட்டியில் முதலாம் இடத்தை பெறுபவருக்கு 25000 ரூபாயும் இரண்டாம் இடத்தை பெறுபவருக்கு 20000 ரூபாயும் மூன்றாம் இடத்தை பெறுபவருக்கு 15000 ரூபாயும் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அத்துடன், சிறந்த 5 தனிநடிப்பு ஆற்றுகைகளுக்கு தலா 2500 ரூபாயும் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியில் தெரிவு செய்யப்படும் தனிநடிப்பு ஆற்றுகைகள் ஏப்ரல் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் நல்லூரில் பிரமாண்டமான ஏற்பாட்டில் நடைபெறும் ஒருநாள் அரங்காற்றுகை திருவிழாவில் மேடையேற்றப்படும்.
போட்டிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தனிநடிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, ஒளி, ஒலி அமைப்பு வசதிகளுடன் மேடையேற்றுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் நேரடியாக விண்ணப்பப்படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியும்.
தயககயெவாநயவசநளூபஅயடை.உழஅஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் விண்ணப்பப்படிவங்களைப் பெற்று, பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago