2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

'வேரின் நிழல்' கவிதை தொகுதி அறிமுக விழா

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


ஆகுதி  பதிப்பக வெளியீடான  கவிஞர் கோ.நாதனின் 'வேரின் நிழல்' கவிதை தொகுதி அறிமுக விழா, சென்னை புத்தக விழாவின் மித்ர பதிப்பக அரங்கத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்லைச் சேர்ந்த கோ.நாதன் நீண்ட காலமாக கவிதைகளை எழுதி வருபவர்.

இவரது கவிதைத் தொகுப்பான வேரின் நிழல் சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலினை கணையாழி சஞ்கிகையின் உதவியாசிரியரும் கவிஞருமான ஜீவகரிகாலன் வெளியிட்டு வைக்க மித்ர பதிப்பகத்தின் கவிஞர் ஈழவாணி பெற்றுக் கொண்டார்.

நூல் அறிமுகத்தினை ஆகுதி பதிப்பகத்தின கவிஞர் சு.அகரமுதல்வன், கவிஞர் கவிதைக்காரன் இளங்கோ ரூ, கவிஞர் க. உதயகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X