2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

யாவரும் பேசலாம் கலை இலக்கிய நிகழ்வு

Gavitha   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


யாவரும் பேசலாம் கலை இலக்கிய நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரனையில், மகுடம் கலை இலக்கிய வட்டத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பிரபல எழுத்தளர் எஸ். பொன்னத்துரையின் நினைவிடை தோய்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டம் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், எஸ்.பொன்னத்துரையின் சிறுகதைகள் பற்றி கவிஞர் அ.ச. பாய்வா மற்றும்  நாவல்கள் பற்றி செங்கதிர் ஆசிரியர் த. கோபாலரெத்தினம் உரையாற்றினர்.

எஸ். பொ.வும் முஸ்லிங்களும் தலைப்பில் கலாபூசணம் ஏ. பீர்முகம்மது மற்றும் நற்போக்கும் பிற்போக்கும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்டினா பிரான்சிஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில். மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் எஸ். நவநீதன், மகுடம் கலை இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் வி. மைக்கல் கொலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .