2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

மதங்கள் வேறுபடலாம்; பரம்பொருள் ஒன்றே

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுதர்சினி சாமிவேல்

மதங்கள் வேறுபடலாம். ஆனால், பரம்பொருள் ஒன்றே. அது மனிதனின் மேலிட்ட அன்பு மட்டுமே. அது எங்கு முழுமையாக காணப்படுகின்றதோ, அங்கு இறைவன் இருப்பான் என்பதே மனவளக்கலை யோகாவின் தாற்பரியமாகும் என உலக சமுதாய சேவா சங்கத்தினுடைய மனவளக்கலை அமைப்பின் தலைவர் அருள்நிதி பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தம் தெரிவித்தார்.

உலக சமுதாய சேவா சங்கத்தினுடைய மனவளக்கலை அமைப்பின் இலங்கைக் கிளை நிறுவப்பட்டு,  நாளை வியாழக்கிழமையுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அன்றையதினம் இது தொடர்பான விசேட நிகழ்வு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதை  முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு  வெள்ளவத்தை குளோபல் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதில் உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை அமைப்பின் தலைவர் அருள்நிதி பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தம், அதன் உறுப்பினர் தங்கவேல், டாக்டர் அருள்நிதியான் பாலமுருகன், செயலாளர் வசந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மனவளக்கலை யோகா, மனிதனின் எண்ணங்களையும் செயல்களையும் சீர்ப்படுத்தி அவனை நெறிமுறையில் அழைத்துச் செல்லும் நோக்கில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியினால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடையாகும்.

அறியாமையை போக்கி மனிதனையை அறநெறியில் அழைத்துச் செல்வதாகும். மனிதனின் எல்லாச் செயற்பாட்டிலும் அறியாமை இருக்கின்றது. இந்த அறியாமையை போக்கி தனி மனிதன் மற்றும் சமுதாயத்தின் ஆரோக்கியத்தை பேணுவதாகும்.

இனம், மதம், சாதி, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் மனவளக்கலை யோகா வழங்கப்பட்டு வருகின்றது. மதங்கள் வேறுபடலாம். ஆனால், பரம்பொருள் ஒன்றே அது மனிதனின் மேலிட்ட அன்பு மட்டுமே. அது எங்கு முழுமையாக காணப்படுகின்றதோ, அங்கு இறைவன் இருப்பான் என்பதே மனவளக்கலை யோகாவின் தாற்பரியமாகும்.

மனிதன் கோபம், ஆணவம், மாயை என்பனற்றிலிருந்து விடுபட்டு அன்பின் வழி நடக்கச்செய்வதும் அன்பு, கருணை  என்பவற்றை மனிதனிடம் முழுமையாக கொண்டுவருவதுமே அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் உயரிய நோக்கமாகும்.

உலக சமுதாய சேவா சங்கத்தினுடைய மனவளக்கலை அமைப்பின் மூலம் இந்தியாவில் 2050 தவ மையங்களும் 150 ஆய்வு மையங்களும் இயங்கிவருகின்றன. மேலும், பாடசாலைகளில் பாடத்திட்டமாக்கப்பட்டு 8ஆம் வகுப்புவரை கட்டாயக் கல்வியாக்கப்பட்டுள்ளது. 20 பல்கலைக்கழகங்களில் அங்கிகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக கற்பிக்கப்படுகின்றது. அத்தோடு, தமிழ்நாட்டிலுள்ள 24,000 காவல் துறையினருக்கும் இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 10,400 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.

மேலும், 20 கிராமங்கள் தெர்ந்;தெடுக்கப்பட்டு  (தத்தெடுக்கப்பட்டு) முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிர் சுயமுயற்சி திட்டத்தின் அடிப்படையில் 200,000 பேருக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அந்த வகையில், உலக சமுதாய சேவா சங்கத்தினுடைய மனவளக்கலை அமைப்பு இலங்கையில் 2004ஆம் ஆண்டு ஆரப்பிக்கப்பட்டது. இன்றைக்கு 20,000 பேர் வரை பயிற்சிகளை  பெற்றுள்ளனர். இலங்கையில் 4 அறக்கட்டளை மையங்களும் 9 தவ மையங்களும் இயங்கிவருகின்றன.

மேலும், வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 16,000 பேருக்கு மனவளக்கலை அமைப்பின் இலங்கைக் கிளைத் தலைவர் முருகானந்தம் தலைமையில் தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன' எனக் கூறினார். 

அறியாமையை போக்கி மனிதகுலத்தில் அமைதியை நிலை நாட்டி வையகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .